/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., அலுவலகத்தில் நிர்வாகிகள் கைகலப்பு
/
காங்., அலுவலகத்தில் நிர்வாகிகள் கைகலப்பு
ADDED : நவ 12, 2024 07:13 AM
காங்., கட்சி அலுவலகத்தில் பரபரப்பு
புதுச்சேரி: காங்., கட்சி அலுவலகத்தில் வைத்திலிங்கம் முன்னிலையில், மீனவ பிரிவு நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மாநில காங்., அலுவலகத்தில் மகளிர் அணியினர் நேற்று மதியம் 12:30 மணிக்கு, மாநில கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,யிடம் தங்கள் குறைகள் குறித்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது.
அப்போது, கட்சி அலுவலக வாசலில் நின்றிருந்த மீனவ பிரிவு நிர்வாகிகள் காலாப்பட்டு புகேழந்தி, காங்கேயன் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்., மீனவர் பிரிவு சார்பில் நியமிக்கப்பட்ட புகழேந்தி ஆதரவாளர் எதிர்கட்சியினருக்கு வேலை செய்ததாக குற்றம் சாட்டி பிரச்னை நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் கை கலப்பில் ஈடுப்பட துவங்கினர்.
அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் விலக்கி விட்டனர். இருவரும் திடீரென காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் முன்பு மீண்டும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக எச்சரித்து கொண்டனர். பின்னர் காங்கேயன் காங்., கட்சி அலுவலகத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். காங்., கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் முன்னிலையில் இரு நிர்வாகிகள் கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

