ADDED : பிப் 27, 2024 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெத்துசெட்டிபேட்டை பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் துப்புரவு பணி நடந்தது.
பள்ளி முதல்வர் அருள்மொழி வழிகாட்டுதல்படி நடந்த துாய்மை பணியை, புதுச்சேரி மாநில முன்னாள் துணை ராணுவப் படை நலவாழ்வு சங்க தலைவர் சசிகுமார் துவக்கி வைத்தார்.
பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் அருள், ஆடிட்டர் முனிசாமி, தீயணைப்பு துறை குட்டியாண்டி மற்றும் பத்திர எழுத்தர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
சமூக பேரமைப்புதலைவர் இளங்கோவன், துணை தலைவர் பாக் சந்த் செயின், மகளிர் அணி தலைவி கலைவாணிகணேசன், சத்தியா மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

