தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காலநிலை மாற்ற சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

காலநிலை மாற்ற சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

காலநிலை மாற்ற சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி


UPDATED : நவ 04, 2026 06:20 PM

ADDED : நவ 04, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 06:20 PM ADDED : நவ 04, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் உழவர் உதவியகம் சார்பில் விவசாயிகளுக்கு காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி நடந்தது.

வேளாண் அலுவலர் வினோத் கண்ணன் தலைமை தாங்கினார். காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி உளவியல் பேராசிரியர் சரவணன், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி யுத்திகள் குறித்தும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் வல்லுநர் மணிமேகலை மத்திய அரசு திட்டம் குறித்தும், மண்வளத்தை பாதுகாப்பது, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து விளக்கினார்.

மணப்பட்டு கிராம முன்னோடி விவசாயி சேதுராமன், இயற்கை விவசாயத்தை ஊக்கிவிப்பது, இயற்கை இடுபொருள் தயாரிப்பது உடல் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினார்.

முகாமில் கடுவனுார், கரையாம்புத்துார், பனையடிக்குப்பம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை உழவர் உதவியக களப்பணியாளர்கள் மதன்குமார், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us