ADDED : நவ 04, 2026 06:20 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: திப்புராயப்பேட்டையில் உள்ள மகாத்மா காந்தி தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.,4) நடந்தது.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் பங்கேற்று உள்நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இணை இயக்குநர்கள் சிவராமன், சுவாமிநாதன், மருந்தாளுநர் புகழேந்தி, செவிலியர்கள், மருத்துவமனை சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் பண்டகக் காப்பாளர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
