தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை விவசாயிகளுக்கு முதல்வர் வழங்கல்

பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை விவசாயிகளுக்கு முதல்வர் வழங்கல்

பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை விவசாயிகளுக்கு முதல்வர் வழங்கல்


ADDED : அக் 23, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையை முதல்வர் ரங்கசாமி விவசாயிகளுக்கு வழங்கினார்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நெல் சாகுபடி செய்யும் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்க தொகையாக ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரமும், அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 7 ஆயிரம் ரூபாயாக- உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025 –-26 ஆண்டில் சம்பா, தாளடி மற்றும் கரும்பு சாகுபடி செய்த 1077 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே ,46 லட்சத்து 93 ஆயிரத்து 870 ரூபாயும், 143 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.13 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாய் என மொத்தம் ரூ.1கோடியே 60 லட்சத்து 46 ஆயிரத்து 270 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான ஊக்க தொகையை, முதல்வர் ரங்கசாமி காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு காசோலையாக வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜசேகரன், சிவக்கொழுந்து செயலர் ரவி பிரகாஷ், வேளாண்துறை இயக்குனர் ஜெயசங்கர், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us