விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் :மாணவர்களுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் :மாணவர்களுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
UPDATED : ஜூலை 29, 2026 06:21 PM
ADDED : ஜூலை 29, 2026 05:51 PM

புதுச்சேரி: புதுச்சேரி நீச்சல் டைவிங் மற்றும் வாட்டர் போலோ சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் அக்வாடிக் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுச்சேரி நீச்சல் டைவிங் மற்றும் வாட்டார்போலோ சங்கம் சார்பில், 12வது ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
முருங்கப்பாக்கம், நீச்சல் மையத்தில் நடந்த போட்டியில், புதுச்சேரி, ஏனாம் மற்றும் மாகே பகுதிகளை சேர்ந்த 160 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முதல்வர் பேசுகையில், 'அரசு விளையாட்டிற்கு என தனியாக துறையை வைத்துள்ளது. அதன் மூலம் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது. ஆகையால் அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு, விளையாட்டுகளில் சாதித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.
இதில், சங்க தலைவர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
