/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ADDED : நவ 24, 2024 04:08 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் பணியை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் செய்யும் பணி வரும், 2025ம் ஆண்டு, ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த அக்., 29ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
இதில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணியானது, வரைவு வாக்காளர் பட்டியலுடன் நடக்கிறது.
இப்பணி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான சிறப்பு முகாம், புதுச்சேரியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நேற்று நடந்தது.
இப்பணி நடந்த சாரம் அரசுத்தொடக்கப்பள்ளி, வெங்கட்டா நகர் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். முகாம் இன்றும் நடக்கிறது.