/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலர் சர்ட் - வேட்டி காம்போ பேக் ராம்ராஜ் நிறுவனத்தில் அறிமுகம்
/
கலர் சர்ட் - வேட்டி காம்போ பேக் ராம்ராஜ் நிறுவனத்தில் அறிமுகம்
கலர் சர்ட் - வேட்டி காம்போ பேக் ராம்ராஜ் நிறுவனத்தில் அறிமுகம்
கலர் சர்ட் - வேட்டி காம்போ பேக் ராம்ராஜ் நிறுவனத்தில் அறிமுகம்
ADDED : ஜன 01, 2025 05:46 AM

புதுச்சேரி :   ராம்ராஜ் காட்டன் நிறுவனம், வேட்டி வாரத்தை முன்னிட்டு, ரூ.695க்கு கல்ச்சர் கிளப் கலர் சர்ட் மற்றும் வேட்டி காம்போ பேக் அறிமுகம் செய்துள்ளது.
இளைய தலைமுறையினருக்கு, பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, வேட்டி என்ற இந்திய கலாசார உடையின் மகத்துவத்தை வாழ்வின் ஒரு பகுதியாக மாற ராம்ராஜ் நிறுவனம் ஆண்டுதோறும் ஜன. 1 முதல் 7 வரை வேட்டி வாரம் கொண்டாடி வருகிறது.
அதையொட்டி, இந்தாண்டு 'கல்ச்சர் கிளப்' கலர் சர்ட் மற்றும் வேட்டியை அனைவரும் வாங்கும் விலையில் ரூ. 695க்கு, 10க்கும் மேற்பட்ட அழகான வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அறிமுக விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி ஆகியோர் பங்கேற்று, புது ரகங்களின் கலர் சர்ட் மற்றும் வேட்டிகளை அறிமுகம் செய்தனர்.
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் நாகராஜன் கூறுகையில், 'ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாடப்படும் வேட்டி வாரத்தில் அனைவரும் பங்கேற்கும் வகையிலும், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வளர்ச்சி பெறும் வகையிலும் கலர் சர்ட் மற்றும் வேட்டி இணைத்து வழங்கப்படுகிறது
கிராமப்புற நெசவாளர் நலன் கருதி வாடிக்கையாளர் அதிகம் வாங்கும் விலையில் புது, புது ரகங்களில் கலர் சர்ட்டுடன் வேட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை பொங்கல் பரிசாக, கல்ச்சர் கிளப் ரகங்கள் வழங்கப்படுகிறது.
கல்ச்சர் கிளப் காம்போ பேக் ரகங்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும், ராம்ராஜ் ஷோரூம்களிலும் கையிருப்பு உள்ளவரை விற்பனைக்கு கிடைக்கும். இச்சலுகை தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்' என்றார்.

