/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜி.எஸ்.டி., கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய இந்திய கம்யூ., வலியுறுத்தல்

ADDED : செப் 05, 2025 02:58 AM

புதுச்சேரி:ஜி.எஸ்.டி., கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என, இந்திய கம்யூ., தேசிய செயலர் நாராயணா தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடந்த அக்கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற அவர், கூறியதாவது:
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு ஜி.எஸ்.டி., என்ற பெயரில் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்தது. தற்போது பல்வேறு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றம் தான்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் நாட்டில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க.,வை பா.ஜ., பிளவுபட வைத்துள்ளது. அதேபோன்ற நிலை தான் 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்படும்.தற்போது ஆட்சியில் சிறுபான்மையாக உள்ள பா.ஜ., வரும் தேர்தலில் 50 சதவீத இடங்களைக் கேட்டு போட்டியிடும். மீதி 50 சதவீத இடங்களை ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்.,கிற்கு அளிக்கும். இந்த இரண்டு கட்சிகளும் மக்கள் விரோத ஆட்சியை அளித்து வருவதால், அவை, தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் காணாமல் போய்விடும்' என்றார்.