/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் துவக்கம்
/
அரசு பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 07, 2025 01:29 AM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்,  சமுதாய நலப்பணி திட்டம்   துவக்க விழா நடந்தது.
பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம்   துவக்க விழா, ற்றும்  வன நாள் கொண்டாடப்பட்டது.  தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பொறுப்பு தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.
கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர்  பாலகங்காதரன் மாணவர்களுக்கு மழை, காடுகள், இயற்கை வேளாண்மை, இயற்கையை  பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  சமுதாய நலத்திட்ட  மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் திட்டப் பயன்கள் சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, பள்ளியில் மர கன்றுகள் நடப்பட்டது. கவிதை போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.  நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மாரியம்மாள்,  ரமேஷ், ஜெயந்தி, ரமேஷ், சுகுணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுதாய நலத்திட்ட அலுவலர் பாலமகேஸ்வரி நன்றி கூறினார்.

