ைஹமாஸ் விளக்கு எரியுமா?
இ.சி.ஆரில் மடுவுபேட் சந்திப்பில், ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
பாலசுப்ரமணியன், புதுச்சேரி.
குண்டும் குழியுமான சாலை
தவளக்குப்பம், அண்ணா நகரில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவஞானம், தவளக்குப்பம்.
மரக்கிளை அகற்றப்படுமா?
கொக்குபார்க் அருகே சாலையோரம் உள்ள மரத்தின் கிளை கீழே விழும் அபாத்தான நிலையில் இருப்பதால், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவராஜன், புதுச்சேரி.
லாஸ்பேட்டை, விமான நிலையம் செல்லும் சாலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராகவன், புதுச்சேரி.
சுற்றித்திரியும் பன்றிகள்
தேங்காய்த்திட்டில், பன்றிகள் அதிகமாக சுற்றித்திரிவதால், நகராட்சியினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், தேங்காய்த்திட்டு.
நாய்களால் விபத்து அபாயம்
நைனார்மண்டபம், தென்னஞ்சாலை ரோட்டில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் இரவு நேரத்தில் வாகனத்தில் செல்வோரை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மணி, புதுச்சேரி.