கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
ரெட்டியார்பாளையம் அரசு மருத்துவமனை அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
ராஜ், ரெட்டியார்பாளையம்.
சுகாதாரசீர்கேடு
மூலக்குளம், அன்னை தெரேசா நகர், 5வது குறுக்கு தெருவில், கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திருநாவுக்கரசு, மூலக்குளம்.
பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவில் குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராஜூ, பிருந்தாவனம்.
போக்குவரத்து இடையூறு
கதிர்காமம், சாஸ்திரி நகர் முதல் குறுக்கு தெருவில், வெகு நாட்களாக கார் ஒன்று சாலையில் நிற்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கர், கதிர்காமம்.
சாலையில் திரியும் மாடுகள்
அரும்பார்த்தபுரம் புதிய பைபாசில் காலை மற்றும் மாலை நேரத்தில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படுகிறது.
செந்தில்குமார், புதுச்சேரி.
வாகன ஓட்டிகள் அவதி
ஆரியப்பாளையம் புதிய பாலத்தில் உருவான பள்ளத்தை மூடி தார் சாலை அமைக்காமல், சிமென்ட் மற்றும் கருங்கள் கலந்த ரெடிமிக்ஸ் கொட்டி வைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
குமரன், சோரப்பட்டு.
மின் விளக்கு எரியுமா?
மணக்குள விநாயகர் கோவில் வீதியில் தபால் தலைமை அலுவலக கட்டட பகுதியில் மின் விளக்குகள் எரியவில்லை.
விஜயபாஸ்கர், புதுச்சேரி.
ரோமண்ட் ரோலண்ட் வீதியில் சாலையோர மின் விளக்குகள் பழுதாகி கிடப்பதால், இரவு நேரத்தில் இச்சாலைய பயன்படுத்த சுற்றுலா பயணிகள் அஞ்சுகின்றனர்.
நிரஞ்சன், புதுச்சேரி.