24 மணி நேரமும் எரியும்
தெரு விளக்கு
கலிதீர்த்தாள்குப்பம் மயிலம் சாலையில், 4 தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதமாக 24 மணி நேரமும் எரிகிறது. இரவில் மட்டும் மின் விளக்கு எரியும் வகையில் மின்துறை சரிசெய்ய வேண்டும்.
பாலாஜி, கலிதீர்த்தாள்குப்பம்.
போக்குவரத்து இடையூறு
பழைய பஸ் ஸ்டாண்டு, காய்கறி மார்கெட் பகுதியில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மணி, புதுச்சேரி.
மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரவிச்சந்திரன், மரப்பாலம்.
மின் விளக்கு எரியுமா?
அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மின் விளக்கு எரியாமல் இருப்பதால், அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.
தாமோதரன், தவளக்குப்பம்.
வாகன ஓட்டிகள் அவதி
ஜீவானந்தபுரம் - கம்பளிமட சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுந்தர், ஜீவானந்தபுரம்.

