நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடை தேவை
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே வாகனங்கள் வேகமாக செல்லுவதால் விபத்து அபாயம் உள்ளது. இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பாரதி,புதுச்சேரி.
தெரு விளக்கு எரியுமா?
லாஸ்பேட்டை ஏர்போர்ட் வீதி, தில்லை கண்ணா வீதியில் தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.
பிரேமா,லாஸ்பேட்டை.
சுகாதார சீர்கேடு
ராஜ்பவன் செட்டித் தெருவில் வாய்க்கால் அடைத்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஜெயச்சந்திரன், ராஜ்பவன்.
துர்நாற்றம் வீசுகிறது
உழவர்கரை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொது கழிவறை போதிய பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது.
தினேஷ்,புதுச்சேரி.

