நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் குப்பை உழவர்கரை, துாய தம்பி தோட்டம் பகுதியில் குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சஞ்சீவி, உழவர்கரை. கலங்கலான குடிநீர் மூலக்குளம், பாரிஸ் நகரில், குடிநீர் கலங்கலாக வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செந்தில், மூலக்குளம். நாய்கள் தொல்லை வில்லியனுார் சாலையில், தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரஜினி முருகன், வில்லியனுார். நிழற்குடை தேவை மரப்பாலம் சந்திப்பில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில், மழையில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.
சாந்தி, மரப்பாலம்.