நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியுமா? கஸ்துாரிபாய் நகர், மெயின் ரோட்டில், தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது. கருணாகரன், புதுச்சேரி. காலி இடங்களில் மழைநீர் தேக்கம் காமராஜர் நகர் தொகுதி, சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 2வது குறுக்கு தெருவில், காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
ஜார்ஜ், புதுச்சேரி.  சாலையில் மீன் விற்பனையால் நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து நெரிசலில், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணன், உப்பளம்.  பயணிகள் நிழற்குடை தேவை மரப்பாலத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல், மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.  மணிவண்ணன், மரப்பாலம்.  சாலையை அகலப்படுத்த வேண்டும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையை அகலப்படுத்த வேண்டும். மீனாட்சி, புதுச்சேரி.

