
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியவில்லை லாஸ்பேட்டை அவ்வை நகர், 3வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. அனுராதா, லாஸ்பேட்டை. மெகா பள்ளம் அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, மெகா பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
கணபதி, அரியாங்குப்பம். சாலையில் மீன் விற்பனையால் இடையூறு உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து, மீன் விற்பனை செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மதிவாணன், உப்பளம். ஜிப்மருக்கு இரவில் பஸ் இயக்கப்படுமா? புதிய பஸ் ஸ்டேண்டில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். விஜயலட்சுமி, புதுச்சேரி. ரயில்வே மேம்பாலம் படுமோசம் நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மகேஸ்வரி, மரப்பாலம்.

