நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கர், உப்பளம் குண்டும் குழியுமான சாலை கனகன் ஏரியில் இருந்து புதுநகர் செல்லும் சாலை குண்டும், குழிமாக உள்ளது.
மணி, புதுச்சேரி. குடிமகன்களால் மக்கள் அச்சம் வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் இரவு நேரங்களில் மது குடிப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கருணாநிதி, வேல்ராம்பட்டு. தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில், தெரு நாய்கள் தொல்லையால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
ரமேஷ், தட்டாஞ்சாவடி. வாகனங்களால் நெரிசல் ராஜிவ்காந்தி சிக்னலில், பிரி லெப்ட் பாதையில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரமணா, புதுச்சேரி.

