UPDATED : ஆக 17, 2026 07:47 PM
ADDED : ஆக 17, 2026 07:41 PM
வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில், மின் விளக்குகள் அமைக்கப்படாததால், அப்பகுதி முழுதும் இருள் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-கணேஷ்குமார், வீராம்பட்டினம். தொற்றுநோய் அபாயம் திருகாஞ்சி, அம்பேத்கர் வீதியில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-நிஷால், திருகாஞ்சி. கழிவுநீர் வாய்க்கால் சேதம் பண்டசோழநல்லுார், அம்பேத்கர் நகரில் கட்டப்பட்டுள்ள 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது.
-சங்கர், பண்டசோழநல்லுார். சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? விநாயகம்பட்டு, ஐயனார் கோவில் தெரு சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
-சஞ்சய், விநாயகம்பட்டு,
