தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சுப்பையா நகரில் குறை கேட்பு

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சுப்பையா நகரில் குறை கேட்பு

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சுப்பையா நகரில் குறை கேட்பு


UPDATED : நவ 15, 2026 06:30 PM

ADDED : நவ 15, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 06:30 PM ADDED : நவ 15, 2026 06:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், முதல்வர் ஆலோசனைப்படி சுப்பையா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது.

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சுப்பையா நகர் பகுதி பொதுமக்கள் பங்கேற்று, வீதிகள் தோறும் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வெறிநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தொடர்ந்து, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., பேசுகையில், ‘வரும் காலங்களில் மாதந்தோறும் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தனது தாயார் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, குறைகளுக்குத் தீர்வு காண பாடுபடுவேன்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us