UPDATED : நவ 15, 2026 06:33 PM
ADDED : நவ 15, 2026 06:30 PM

புதுச்சேரி: புதுச்சேரி நீரிழிவு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், உலக நீரிழிவு தின சிறப்பு தொடர் கல்வி மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு மருத்துவ சங்க புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர், செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினர். மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் அசோக்குமார்தாஸ், ‘நீரிழிவு நோய்க்கான ஆரம்ப கால நடவடிக்கை என்ற தலைப்பிலும், புதுச்சேரி நீரிழிவு ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர் விஜயபாஸ்கர் ரெட்டி 2026ல் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை தேர்தெடுப்பது எப்படி என்ற தலைப்பிலும், ஜிப்மர் பேராசிரியர் ஜெயபிரகாஷ் சாகோ டைப் 2 நீரிழிவு நோயாளிக்களுக்கான உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு மேலாண்மை குறித்தும் பேசினர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
