ADDED : நவ 15, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லுார்துநாதன்,55; திருமணம் ஆகாத இவர், செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். இவர் தினமும் மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது வழக்கம்.
நேற்று (நவ.,14) அதிகாலை 4.45 மணிக்கு புஸ்சி வீதியில் கடற்கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
படு காயமடைந்த லுார்துநாதனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
