தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : ஜூலை 16, 2023 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2023 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி,-பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

வில்லியனுார் துாய இதய மரியன்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் ராணி சூசை ரெஜினா, வள்ளி, அருள் சீலி, ராகினி, வாசுகி, எழில், செல்வி மற்றும் பல்நோக்கு ஊழியர் ஜெரால்டு ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர்.

அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பள்ளி ஆசிரியர்கள் ஆற்றிய சேவைகள் குறித்து நினைவு கூறப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பணி ஓய்வு பெற்ற ஆசிரி யர்கள், பல்நோக்கு ஊழியர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் பள்ளியில் கடந்த 1998ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் பங்கேற்று, தங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். தங்கள் வளர்ச்சிக்கு பள்ளியின் அடித்தள கல்வியே முக்கிய காரணம் என புகழாரம் சூட்டினர். தங்களுடைய குடும்பத்தினரை ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us