தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவிலில் கான்கிரீட் தளம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவிலில் கான்கிரீட் தளம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவிலில் கான்கிரீட் தளம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு


UPDATED : அக் 11, 2026 05:54 PM

ADDED : அக் 11, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:54 PM ADDED : அக் 11, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலில் கான்கிரீட் மேல்தளம் சரிந்து விழுந்ததால், பரபரப்பு நிலவியது.

காரைக்கால், திருப்பட்டினம் மெயின்ரோட்டில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஓராண்டாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் கோவிலின் மேல்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது திடீரென முட்டு மரங்கள் சரிந்து விழுந்தது. இதில் கோவில் மேல்தளம் கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகள் கீழே விழுந்தன.

இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவில் புனரமைப்புப் பணிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து கட்டுமான நிர்வாகிகளை போலீசார் விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us