தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பயணியை தாக்கிய கண்டக்டர் மீது வழக்கு

பயணியை தாக்கிய கண்டக்டர் மீது வழக்கு

பயணியை தாக்கிய கண்டக்டர் மீது வழக்கு


ADDED : அக் 13, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பயணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பஸ் கண்டக்டர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது சகோதரன் வசந்த், 22; என்பவருடன் மரக்காணம் செல்வதற்கு, கடந்த 11ம் தேதி புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே அரசு பஸ்சில் ஏறினர்.

மரக்காணத்தில் பஸ் நிற்காது என வசந்திடம் கண்டக்டர் கூறினார். ஏன் அங்கு பஸ் நிற்காது என வசந்த் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த கண்டக்டர் லோகநாதன் டிக்கெட் மிஷினால் வசந்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

காயமடைந்த வசந்த், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில், டி.நகர். கண்டக்டர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us