புதுச்சேரியில் காங்., பூஜ்யமாகிவிட்டது: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கருத்து
புதுச்சேரியில் காங்., பூஜ்யமாகிவிட்டது: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கருத்து
UPDATED : ஜூன் 01, 2026 07:13 PM
ADDED : ஜூன் 01, 2026 07:10 PM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி எந்த குற்றச்சாட்டையும் அமைதியாக எதிர்கொள்வார். நான் அப்படிப்பட்டவன் இல்லை என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதல்வர் பணம் வாங்கி கொண்டு எனக்கு அமைச்சர் பதவி கொடுத்ததாக வைத்திலிங்கம் எம்.பி., பேசியுள்ளார். இதேபோல், கடந்த 5 மாதம் முன் என் மீது வைத்திலிங்கம், சில புகார்களை கூறினார். அதற்கு நான் சில ஆவணங்களை வெயிட்டு சவால் விடுத்தும், , வைத்திலிங்கத்திடம் இருந்து இதுவரை பதில் இல்லை. என்னை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.
பணம் பெற்றுத் தான் ரங்கசாமி எனக்கு அமைச்சர் பதவி தந்தார் என்றால், வைத்திலிங்கம் எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு எனக்கு அமைச்சர் பதவி தந்தார். வைத்திலிங்கத்தின் மனநிலை குறித்து சந்தேகம் உள்ளது.
புதுச்சேரியில் காங்., தற்போது பூஜ்யமாகி விட்டது. காங்., வேட்பாளர்களுக்கு தலைமை கொடுத்த பணத்தில் 50 சதவீதம் திருடிவிட்டதாக காங்., கட்சியினர் பேசுகின்றனர். முதல்வர் எந்த குற்றச்சாட்டையும் அமைதியாக எதிர்கொள்வார். ஆனதலக நான் அப்படிப்பட்டவன் இல்லை. என் மீது கவர்னராக இருந்த கிரண்பேடி குற்றச்சாட்டு கூறியபோது பதிலடி தந்தேன்.
சார்லஸ் மார்டின் அமைச்சர் பதவிக்கு 100 கோடி பேரம் பேசுவதாக கூறியுள்ளார். பேரம் பேசி இருந்தால் அவருக்கு இந்நேரம் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும். அப்படி சார்லஸ் மார்டினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றால், பேரம் பேசியது தோல்வி அடைந்து விட்டதா என தெரிவிக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி பா.ஜ., தலைவர்களுடன் பேசி, விரைவில் முழு அமைச்சரவை பதவியேற்கும், இலாகா ஒதுக்கப்படும் என்றார்.
