/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் காங்., தலைவர் அறிவிப்பு
/
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் காங்., தலைவர் அறிவிப்பு
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் காங்., தலைவர் அறிவிப்பு
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் காங்., தலைவர் அறிவிப்பு
ADDED : ஏப் 23, 2025 04:14 AM
புதுச்சேரி : அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., சிதைப்பதாக காங்., தலைவர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழக அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை பா.ஜ.,வினர் கண்டிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தை எம்.பி.,க்கள் மிரட்டுகின்றனர். கோர்ட் செயல்பாடு குறித்து துணை ஜனாதிபதி கருத்து தெரிவித்திருப்பது வேதனையானது. அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் வரும் மே 1ம் தேதி காங்., சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். வரும் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நேஷனல் ெஹரால்டு வழக்கு விபரத்தை தெரிவிக்கும் வகையில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும். வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொகுதி வாரியகவும், 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை வீடு தேடிச் சென்று மக்களை சந்திக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
புதுச்சேரி மாநில காங்., பொறுப்பாளர் மோகன்குமாரமங்கலம் கூறியதாவது:
மோடி, அமத்ஷாவின் கைக்கூலியாக உள்ள அமலாக்கத்துறை இன்று அமித்ஷா துறையாக மாறியுள்ளது. அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிந்து, பா.ஜ.,வில் இழப்பது வாடிக்கையாக உள்ளது. நேஷனல் ெஹரால்டு வழக்கில் குற்றம் நடந்ததற்கான ஆதாரமே இல்லை. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,சை கடுமையாக எதிர்க்கும் ராகுல் மற்றும் சோனியாவை பழி வாங்கும் நோக்கிலேயே நேஷனல் ெஹரால்டு வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்., கட்சியை கலங்கப்படுத்தவே செய்கின்றனர். இதனை காங்., கட்சி சட்ட ரீதியாக சந்திக்கும் என்றார். பேட்டியின்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

