/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம்
/
காங்., வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஏப் 21, 2025 04:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் காந்திராஜ், காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தாமி, ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பெருமாள், விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது, காங்., கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் ராமலிங்கம், பிரதீஷ் இருதயராஜ், பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

