sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டு திருட்டை கண்டித்து காங்., ஊர்வலம்

ஓட்டு திருட்டை கண்டித்து காங்., ஊர்வலம்

ஓட்டு திருட்டை கண்டித்து காங்., ஊர்வலம்


ADDED : ஆக 31, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 05:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : புதுச்சேரியில், ஓட்டு திருட்டை கண்டித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில், ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., சார்பில், நேற்று ஊர்வலம் நடந்தது. அரியாங்குப்பத்தில் புறப்பட்ட ஊர்வலத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.

அகில இந்திய காங்., செயலாளர் சூரத் ஷெக்டே, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மாநில பொதுச்செயலாளர் தனுசு, முன்னாள் காங்., தலைவர் இளையராஜா, வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, வட்டார காங்., தலைவர் ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர் குமரன், முத்தியால்பேட்டை தொகுதி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் உட்பட ஆயிரணக்கான காங்., தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் அரியாங்குப்பத்தில் இருந்து முருங்கப்பாக்கம், முதலியார்பேட்டை வழியாக சென்று, கடலுார் சாலை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில், இரவு 7:30 மணியளவில் நிறைவடைந்தது. இதனால், அரியாங்குப்பம் முதல் முதலியார்பேட்டை வரை, போக்குவரத்து பாதித்தது.

மகளிரணி தலைவிக்கு திடீர் மயக்கம்

ஊர்வலத்தில், காரில் உட்கார்ந்து சென்ற, காங்., மாநில மகளிரணி தலைவி நிஷாவுக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை கட்சி தொண்டர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us