தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அதிவேகத்தில் செல்வர்கள் மீது நடவடிக்கை காங்., நிர்வாகிகள் டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை

அதிவேகத்தில் செல்வர்கள் மீது நடவடிக்கை காங்., நிர்வாகிகள் டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை

அதிவேகத்தில் செல்வர்கள் மீது நடவடிக்கை காங்., நிர்வாகிகள் டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை


UPDATED : நவ 18, 2026 08:30 PM

ADDED : நவ 18, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 08:30 PM ADDED : நவ 18, 2026 08:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அதிவேகமாக பைக்கில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., நிர்வாகிகள் டி.ஐ.ஜி., சத்தியம் சுந்தரத்திடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி காங்., பொதுச் செயலாளர்கள் சிவசண்முகம், ரகுமான், மாநில செயலாளர்கள் சரவணன் ,குலசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன் சரவணன், தர்மராஜ், புண்ணியமூர்த்தி, பிரபு ஆகியோர் அளித்த மனு:

புதுச்சேரி நகர பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் பொது மக்கள் அதிகளவில் சாலையில் சென்று வருகின்றனர். இந்த சூழலில் பெரும்பாலான இளைஞர்கள் அதிக வேகம் கொண்ட பைக்குகளில் தனியாகவும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து கூட்டாகவும் அதிக ஹாரன் சத்தத்துடன் நம்பர் பிளேட் இல்லாமல், சாலை விதிகளை மதிக்காமல் வளைந்து நெளிந்தும் அசுர வேகத்தில் செல்கின்றனர்.

இதனால் மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் அச்சத்தில் கீழே விழுந்து செல்வதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே நகரப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்பவர்களின் வண்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்பவர்கள் பைக் மற்றும் கார்களில் அதிக வேகமாக செல்பவர்கள் அனைவரையும் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் உயர் அதிகாரிகள் மற்றும் அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் ரோந்து வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us