/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம்
/
தொகுதி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 16, 2025 11:29 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தலைமைப் பொறியாளர் வீர செல்வம், செயற் பொறி யாளர்கள் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், காட்டாமணிகுப்பம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளுவர் நகர் மற்றும் பெருமாள் கோவில் பெரிய வாய்க்காலை மழைக்கு முன் துார்வர வேண்டும்.
தொகுதியின் முக்கிய வீதிகளில் சாலைகள் மேம்படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வே ண்டும் என, எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.