/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி மேம்பாட்டு பணி : அமைச்சர் ஆலோசனை
/
தொகுதி மேம்பாட்டு பணி : அமைச்சர் ஆலோசனை
ADDED : அக் 15, 2025 11:07 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் மங்கலம் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், கோபி, வைத்தியநாதன், உதவி பொறியாளர் சீனிவாச ராம், ஸ்ரீநாத் இளநிலை பொறியாளர் பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், திருகாஞ்சி கீழ்அக்ராவரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய பாலங்கள் கட்டுதல், அரியூர் பகுதியில் செல்லும் நான்கு வழிச்சாலையின் கீழ் பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கான வழிமுறை மற்றும் வில்லியனுாரில் மார்க்கெட் கமிட்டி கட்டடம் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.