ADDED : நவ 28, 2025 04:36 AM
பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் அமலி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் தனுஷ், உடற்பயிற்சி விரிவுரையாளர் முரளிதரன் மேற்பார்வையில், இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
விரிவுரையாளர்கள் சிவசுப்ரமணியன், ஆனந்தவேலு ஆகியோர் தலைமையில், கட்டுரை போட்டி, ஆசிரியர்கள் சுதா, ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் வினாடி வினா போட்டி நடந்தது. விரிவுரையாளர்கள் காஞ்சனா, கலைமகள் பாண்டியன் ஆகியோர் தலைமையில், ஓவியப் போட்டி, கணினி ஆசிரியர்கள் தங்கவேலு, மீனாட்சி ஆகியோர் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.
இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து விரிவுரையாளர் ஜாஸ்மின்,நுாலக ஆசிரியர் ஜோதிலட்சுமி ஆகியோர் கருத்துரையாற்றினர். ஏற்பாடுகளை ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

