/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காப்பீட்டு திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்
/
காப்பீட்டு திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்
ADDED : டிச 20, 2024 04:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 'முதல்வரின் விபத்து காப்பீடு திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம், துறை அலுவலகத்தில் நடந்தது.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கி, பேசுகையில், பிரதான் மந்திரி சுரக் ஷா பீமாயோஜன் மத்திய அரசு திட்டம், மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும், இறப்பு மற்றும் விபத்து காப்பீட்டு தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலம், விபத்து காரணமாக இறப்பு மற்றும் நுாறு சதவீதம் ஊனம் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு 2 லட்சம், முழுமையான மீளமுடியாத கண் பார்வை, அங்க ஊனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு தகுதியுள்ள அனைத்து சிவப்பு அட்டை குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீட்டு பிரிமியம் தொகை அரசு செலவில் காப்பீட்டு நிறுவன்ங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு செலுத்தப்படுகிறது. இத்திட்டம் கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூகநலத்துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி, வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.