/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரும்ப பெற முடியாத வாக்காளர் பட்டியல் அரியாங்குப்பம், மணவெளியில் ஆலோசனை
/
திரும்ப பெற முடியாத வாக்காளர் பட்டியல் அரியாங்குப்பம், மணவெளியில் ஆலோசனை
திரும்ப பெற முடியாத வாக்காளர் பட்டியல் அரியாங்குப்பம், மணவெளியில் ஆலோசனை
திரும்ப பெற முடியாத வாக்காளர் பட்டியல் அரியாங்குப்பம், மணவெளியில் ஆலோசனை
ADDED : டிச 11, 2025 06:25 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளில் திரும்ப பெற முடியாத வாக்காளர் பட்டியல் விவரங்கள் அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நிறைவு நிலையை எட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடந்தது. முகவரியில் வசிக்காதோர், நிரந்தரமாக குடிபெயர்ந்தோர், இறந்தோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியல் அனைத்து ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளில் 73 ஓட்டுச் சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய அரசியல் கட்சிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் நடத்தப்பட்டது. இப்பணியை வாக்காளர் பதிவு அதிகாரி-10, சவுந்தரி ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். வசிக்காதோர், நிரந்தரமாக குடிபெயர்ந்தோர், இறந்தோர் ஆகியோரின் பட்டியலை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
மேலும் வழங்கப்பட்ட பட்டியல் தகுதியுடைய வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதாக தெரிந்தால், அதற்கான விவரங்களை வழங்குமாறு ஓட்டுச்சாவடி முகவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

