/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் அமைச்சர் நமச்சிவாயம் 'பளீச்'
/
போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் அமைச்சர் நமச்சிவாயம் 'பளீச்'
போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் அமைச்சர் நமச்சிவாயம் 'பளீச்'
போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் அமைச்சர் நமச்சிவாயம் 'பளீச்'
ADDED : டிச 11, 2025 06:26 AM

புதுச்சேரி: போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்ததே முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலத்தில் தான் என, அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் போலி மருந்து குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு கடந்த 2017ம் ஆண்டு நாராயணசாமி முதல்வராக இருந்தபோது தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2027ம் ஆண்டு வரை மருந்து தயாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். இந்த போலி மருந்து தொழிற்சாலையை கண்டுபிடித்தது எங்கள் அரசு.
கடந்த 2019ல் அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்துகளை விநியோகம் செய்ததும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலத்தில்தான். அதை கண்டுபிடித்ததும் எங்கள் அரசுதான். கைது நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
தவறுகளை செய்துவிட்டு தங்கள் தவறை மறைக்க முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், எதிர்க்கட்சி தலைவர் சிவாவும் எங்கள் அரசு மீது பழி சுமத்தி பொய் பிரசாரம் தேர்தலில் வெற்றி பெற திட்டமிடுகின்றனர். எங்கள் அரசின் மீது எந்த குறையும் கூற முடியாததால், இதுபோன்ற செயல்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் யாரையும் மறைக்கவோ, காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
போலி மருந்து வழக்கில் ராணா, மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜா (எ) வள்ளியப்பன் இன்று (நேற்று) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை விசாரணைக்கு எடுக்க உள்ளோம். தொழிற்சாலையில் இருந்த ரூ.14 கோடி மதிப்புள்ள புதிய இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளோம். ராஜா வீட்டில் இருந்து ரூ.2.50 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.18 லட்சம் ரொக்கம், கார், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சரணடைந்துள்ள ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இன்னும் பல தகவல்கள் தெரியவரும். இதில் பரிசு, கார்கள் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட அரசு முடிவு செய்தால், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்க போலீஸ் துறை தயாராக உள்ளது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உட்பட துறைகளுக்கு போலி மருந்து தொழிற்சாலை தொடர்பான அறிக்கைகளை அனுப்பியுள்ளோம். எங்கள் மடியில் கனமில்லை என்பதால்தான் நாங்களும் (பா.ஜ.,வும்) சி.பி.ஐ., விசாரணை கோரியுள்ளோம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தருவோம்.
போலி மருந்து வடமாநிலங்களில் எங்கு விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படும். எஸ்.பி., தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைத்துள்ளோம். அக்குழுவினர் விசாரித்து வருகின்றனர். சரணடைந்துள்ள ராஜாவை, விசாரணைக்கு பிறகே முழு தகவல்கள் தெரிய வரும். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

