/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
/
ஒப்பந்த ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
ADDED : ஜன 27, 2026 04:40 AM

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் 6வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிக்கா உள்ளிட்ட 292 ஆசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் பகுதியாக, பணி நிரந்தரம் செய்யகோரி ஒப்பந்த ஆசிரியர்கள் கடந்த 21ம் தேதி முதல், கல்வித்துறை வளாகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6வது நாளாக குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
போராட்டத்திற்கு இளைஞர் காங்., தேசிய தலைவர் மணீஷ் சர்மா, எதிர்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., துணை சபாநாயகர்கள் பாலன், செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

