ADDED : ஆக 30, 2026 08:58 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மீனாட்சிசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
டி.ஆர்.பட்டினம் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். காரைக்கால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி மற்றும் டிரைவர்களை நியமிக்க வேண்டும்.
பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த 'ஜின்னிங்' மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பருத்தி பதப்படுத்தும் மையங்களை காரைக்காலில் அமைக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள டி.ஏ., மற்றும் உயர்த்தப்பட்ட சம்பள நிலுவைகளை வழங்க வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
