/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
/
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
ADDED : ஆக 06, 2025 11:31 PM

காரைக்கால்: காரைக்காலில் முதல்வர் பிறந்த நாளையொட்டி, என்.ஆர்.காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி கோட்டுச்சேரி என்.ஆர்.காங்., சார்பில், சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தலைமையில் வடமட்டம் சாலையில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப் பட்டது.
இப்போட்டியில், 20 அணிகள் பங்கேற்றன. அதில் சந்திரபிரியங்கா கிரிக்கெட் கிளப், நெடுங்காடு கிரிக்கெட் கிளப், நாகப்பட்டினம் கிரிக்கெட் கிளப், அக்கரைப்பேட்டை கிரிக்கெட் அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தனர்.
இந்த அணிகளுக்கு முறையே ரூ. 20,075; ரூ.15,075, ரூ.12,075, ரூ.10,075 ரொக்கப் பரிசு மற்றும் சுழற்கோப்பையை சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., வழங்கினார்.
விழாவில் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நித்தின், ரவிச்சந்திரன், செந்தில்வேல், செல்வகணபதி, மணிமாறன், வினோத், கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.