/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராஸ் கன்ட்ரி போட்டி பரிசளிப்பு
/
கிராஸ் கன்ட்ரி போட்டி பரிசளிப்பு
ADDED : டிச 26, 2024 05:52 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சூர் தடகள சங்கம் சார்பில், 38வது மாநில அளவிலான கிராஸ் கன்ட்ரி போட்டிகள் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 193 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
தடகள சங்கத்தின் மாநில தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் ரகுராமன் வாழ்த்தி பேசினார். சீனியர் பயிற்சியாளர் டாக்டர் தமிழப்பன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள் பிரேம்குமார், சோமு சுந்தரம், முருகன், கோபு மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

