/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் சி.டி., ஸ்கேன், ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் சி.டி., ஸ்கேன், ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
அரசு மருத்துவக் கல்லுாரியில் சி.டி., ஸ்கேன், ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
அரசு மருத்துவக் கல்லுாரியில் சி.டி., ஸ்கேன், ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
ADDED : ஏப் 30, 2025 12:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நவீன 128 ஸ்லைஸ் சி.டி., ஸ்கேன் கருவி மற்றும் மேம்படுத்தப்பட்ட இருதய மற்றும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவன நிதியுதவியுடன் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 128 -ஸ்லைஸ் சிடி ஸ்கேன் கருவி, ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அறுவை சிகிச்சை கூடங்களை பார்வையிட்டார்.
சபாநாயகர் செல்வம், ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத் துறை செயலர் ஜெயந்த் குமார் ராய், சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், நிறுவன மேலாண்மை இயக்குநர் ராமசாமி நாராயணன், பொது மேலாளர் ஜெயஸ்ரீ பாலகிருஷ்ணா, உதவி பொது மேலாளர் ஸ்நேஹா நாயர் வாழ்த்தி பேசினர்.
உயர்தர ரெவலுாஷன் மேக்சிமா சிடி ஸ்கேன் கருவி, துல்லியமான நோயறிதலை வழங்கும் திறனுடன், தீவிர நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் பெரிதும் உதவும். முழுமையாக அவசர தேவைகளுக்கேற்ப உபகரணங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள புதிய ஆம்புலன்ஸ்கள், அவசர மருத்துவ சேவைகளை வலுப்படுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை இயக்குநர் உதயசங்கர் நன்றி கூறினார். அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ராமச்சந்திர வி.பட், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், கதிர்வீச்சியல் துறைத் தலைவர் ஸ்ரீனுவாசன், மருத்துவர்கள் நாராயணசாமி, சுரேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

