தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கியூர் லிட்டில் லைட்ஸ் விழா

கியூர் லிட்டில் லைட்ஸ் விழா

கியூர் லிட்டில் லைட்ஸ் விழா


ADDED : நவ 14, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 08:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி – வில்லியனுார் மெயின் ரோடு விவேகானந்தா நகரில் இயங்கி வரும் மூகாம்பிகா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தினம், கார்த்திகை தீபம், தீபாவளி திருநாளை முன்னிட்டு ‘கியூர் லிட்டில் லைட்ஸ் 2026, என்ற களிமண் அகல்விளக்கு ஓவியம் மற்றும் அலங்கார விழா புதுச்சேரி கீயூர் காது கருவிகள் மற்றும் பேச்சுப் பயிற்சி கிளினிக்கில் நடந்தது.

மூகாம்பிகா இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி பேராசிரியர் வேணுகோபால், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி ஓய்வு பெற்ற முதல்வர் சவுந்தரவள்ளி ஆகியோர் தலைமை தாங்கி, விழாவினை துவக்கி வைத்தனர். பேச்சு மொழி கேட்பியல் நிபுணர் முத்துக்குமரன் ஞானசேகரன் வேரவேற்றார். இதில் 4 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.

இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், கடலுார், சிதம்பரம் கீயூர் காது கருவிகள் பேச்சு பயிற்சி கிளினிக் கிளைகளில் நடந்தது. தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பொது நல மருத்துவர் அனுஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us