தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.51.58 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை

 ரூ.51.58 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை

 ரூ.51.58 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை


ADDED : பிப் 13, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.51.58 லட்சம் இழந்தனர்.

புதுச்சேரி, முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் இணைத்துள்ளார்.

அதன்பின், மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ.50 லட்சத்து 75 ஆயிரம் முதலீடு செய்து, அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதே போன்று, அரும்பார்த்தபுரம் நபர் ரூ.70,000, உழவர்கரை நபர் 4,500, சிவராந்தகம் நபர் 5, 250, , புதுச்சேரி நபர் 4,150 என, மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.51 லட்சத்து 58 ஆயிரத்து 900 இழந்தனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us