/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம், டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சைபர் கிரைம், டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு
சைபர் கிரைம், டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு
சைபர் கிரைம், டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 31, 2026 05:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில், கணினி அறிவியல் துறை, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், விவேகானந்தரின் 163வது பிறந்த நாளை முன்னிட்டு, சைபர் கிரைம் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், சைபர் கி ரைம் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் பங்கேற்று, சைபர் கிரைம் வகைகள், பொதுவான ஆன்லைன் மோசடிகள், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை இணை பேராசிரியர் சவுபத் நாகராஜூ, கணினி அறிவியல் துறை பேராசிரியர் சுரேஷ் குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.
மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.