/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10 பேரிடம் ரூ.32.82 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
10 பேரிடம் ரூ.32.82 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
10 பேரிடம் ரூ.32.82 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
10 பேரிடம் ரூ.32.82 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : டிச 16, 2024 05:16 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 10 பேரிடம், ரூ.32 லட்சத்து, 82 ஆயிரத்து 816 மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். அதே பகுதியில் உள்ள மோரிசன் வீதி - முருகன்; கிருஷ்ணா நகர் - விஷ்வெல் மற்றும் காரைக்கால், நிரவியை சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு, ஆன்லைனில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பி மகேஷ்குமார், பல்வேறு தவணைகளில் ரூ.27.25 லட்சம்; முருகன் - ரூ.1.75 லட்சம்; விஷ்வெல் - ரூ.51 ஆயிரம்; தினேஷ்குமார் - ரூ.50 ஆயிரம், என முதலீடு செய்து ஏமாந்தனர்.
விநாயகம்பட்டு பகுதியை சேர்ந்த முரளியிடம் மர்ம நபர்கள் குறைந்த வட்டிக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார். இதை நம்பி முரளி, ரூ.73 ஆயிரம் அவருக்கு அனுப்பி ஏமாந்தார்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் இந்துஜா ஆன்லைனில், ரூ.200,க்கு அழகு சாதன பொருள்ஆர்டர் செய்தார், பின், இந்துஜாவின் மொபைலில், குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பொருட்களை டெலிவரி செய்வதற்கான முகவரியை குறிப்பிடும் படி கூறினார். அதேபோல அவரும் செய்தார். பின் இந்துஜா வங்கிக்கணக்கில் இருந்து, ரூ.99 ஆயிரம் காணாமல் போனது தெரிந்தது.
காரைக்கால் டி.ஆர். பட்டினத்தை சேர்ந்தவர் கீதா. இவரது வங்கிக்கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல், ரூ.73 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் புஷ்பராஜிடம், மும்பை போலீஸ் அதிகாரி போல பேசினர் அவர் மீது சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறினர்.
இது தொடர்பான விசாரணைக்கு வீடியோ போனில் ஆஜராக வைத்து அவரிடம், ரூ.19 ஆயிரம் பறித்தனர். இந்த, 10 பேரிடம், ரூ.32 லட்சத்து, 82 ஆயிரத்து 816, மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், தனித்தனியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

