/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெஞ்சல் புயல் சேதம் : வல்லுனர் குழு ஆய்வு
/
பெஞ்சல் புயல் சேதம் : வல்லுனர் குழு ஆய்வு
ADDED : ஜன 30, 2025 06:35 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதங்களை வல்லுனர் குழு ஆய்வு செய்கிறது.
பெஞ்சல் புயல் தொடர்பாக, பேரிடருக்கு பிந்தைய, நிரந்தர சீரமைப்பிற்கான மதிப்பீடு குறித்த ஆய்வு மேற்கொள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட, 14 வல்லுனர்களையும், புதுச்சேரி அரசின் பல்துறை அலுவலர்களையும் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு கடந்த, 28ம் தேதியன்று இந்த வல்லுனர் குழு வந்தது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், அவரது அலுவலக கூட்ட அரங்கில் பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு ஆய்வை மேற்கொள்வது குறித்து புதுச்சேரி அரசின் பல்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தது. தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் நோக்கில் நேரில் சென்று, இந்த குழு நாளை வரை மதிப்பீடு செய்ய உள்ளது.

