தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்


ADDED : அக் 26, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடந்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கைலாஷ்நாதன் இன்று (அக்.,26) ஆய்வு செய்தார்.

இந்நிலையில், லாஸ்பேட்டை அவசரகால உதவி மையத்தில் ஆய்வுக் கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. அதில், தலைமை செயலர் சரத் சவுகான், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறை செயலர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பேசினார். மேலும், மழைநீர் வடிகால் வசதிகள், பாதுகாப்பு மையங்கள், மருத்துவ வசதிகள், மீட்புக் குழுக்கள், கால்நடை பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us