பழுதான மெமூ பாசஞ்சர் ரயில்: விழுப்புரம் பணிமனை சென்றது
பழுதான மெமூ பாசஞ்சர் ரயில்: விழுப்புரம் பணிமனை சென்றது
UPDATED : நவ 22, 2026 11:18 PM
ADDED : நவ 22, 2026 11:09 PM
புதுச்சேரி: எருமை மாடு மீது மோதி பழுதான மெமூ பாசஞ்சர் ரயில் பழுது பார்க்கும் பணிக்காக விழுப்புரம் பணிமனைக்கு இன்று (நவ.,22) கொண்டு செல்லப்பட்டது.
புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து நேற்று (நவ.,21) இரவு 7:45 மணிக்கு பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி மெமூ பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது.
ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ. நகர் அருகில் தண்டவாளத்தில் புகுந்த எருமை மாடு மீது மோதி ரயில் பழுதாகி இரண்டு மணி நேரத்திற்கு அந்த இடத்திலேயே நின்றது.
பின், விழுப்புரத்தில் இருந்து வந்த டீசல் இன்ஜினில் இணைக்கப்பட்டு ரயில் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை பழுதான ரயிலை பழுது பார்க்கும் பணிக்காக விழுப்புரம் ரயில்வே பணி மனைக்கு மற்றொரு ரயில் இன்ஜினுடன் இணைக்கப்பட்டு 10 ரயில் பெட்டிகளுடன் விழுப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்த மெமூ ரயிலின் சேவை இன்று ரத்தானது.
