தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் துவக்கம்

புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் துவக்கம்

புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் துவக்கம்


UPDATED : ஆக 13, 2026 06:06 PM

ADDED : ஆக 13, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 06:06 PM ADDED : ஆக 13, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் ஆகஸ்ட் 14 ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

திருச்சி சீராத்தோப்பில், ஜோதிர்லிங்க கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில், பக்தர்கள் தங்கள் கைகளால், சிவலிங்கத்திற்கு அபிேஷகம் செய்யும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் பொதுமக்கள் தங்கள் கைகளால், அபிேஷகம் செய்து வழிபடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரிக்கு (14ம் தேதி) முதல், (16ம் தேதி) வரை 12 ஜோதிர்லிங்கங்களுக்கும், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில், அபிேஷகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் துவக்கமாக, இன்று மாலை 5:00 மணிக்கு சுத்தாத்துவித சைவத் திருமடத்தின் குருமுதல்வர் குமாரசாமி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். செல்வகணபதி எம்.பி., முதல் அபிேஷகம் செய்து, நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். அமைச்சர் நமச்சிவாயம் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணத்தின் புத்தக பிரதிகளை சிவனடியார்களுக்கு வழங்குகிறார்.

நாளை (15ம் தேதி) மாலை 5:00 மணிக்கு புதுச்சேரி திருமங்கலம், சிதம்பரேஸ்வரர் திருமடத்தை சேர்ந்த திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரையின் ஸ்ரீகணேச தேசிக சுவாமிகள் சிவபுராண பாராயணத்தை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்.

(16ம் தேதி) மாலை 6:30 மணிக்கு புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஜோதிர்லிங்கங்களுக்கு அபிேஷகம் செய்து வழிபட உள்ளார். முன்னாள் சபாநாயகர் செல்வம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்.

நிகழ்ச்சி நடக்கும் இந்த மூன்று நாட்களும், மாலை 4:00 முதல், இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தங்கள் கைகளால், ஜோதிர்லிங்கத்திற்கு அபிேஷகம் செய்து வழிபடலாம். தினசரி 1,008 சிவனடியார்கள் ஒரே இடத்தில் கூடி சிவபுராணம் பாராயணம் செய்ய உள்ளனர். ஏற்பாடுகளை புதுச்சேரியில் உள்ள் அனைத்து சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us