/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆர்., மற்றும் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் மரண பள்ளங்கள்
/
இ.சி.ஆர்., மற்றும் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் மரண பள்ளங்கள்
இ.சி.ஆர்., மற்றும் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் மரண பள்ளங்கள்
இ.சி.ஆர்., மற்றும் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் மரண பள்ளங்கள்
ADDED : ஜன 10, 2025 05:52 AM

வாகன ஓட்டிகள் திக். திக்.. திக்...
புதுச்சேரி: இ.சி.ஆர்., மற்றும் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உருவாகியுள்ள மரண பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்கின்றனர்.
இ.சி.ஆரில் ராஜிவ் சிக்னலில் இருந்து சிவாஜி சிலை வரையிலான சாலை கடந்த சில மாதத்திற்கு முன்பே கடும் சேதமாகியது. பெஞ்சல் புயல் மழையின்போது சாலை மேலும் சேதம் அடைந்து சின்ன பின்னமாக மாறியது. பூமியில் வெடிப்பு ஏற்பட்டதுபோல் சாலையில் ஆங்காங்கே நீண்ட பள்ளங்கள் உருவாகி உள்ளது.
இந்த திடீர் பள்ளங்களில் பைக், ஸ்கூட்டர் கடந்து செல்லும்போது சிலிப் ஆகி நிலை குலைந்து விடுகின்றனர். அருகில் டிப்பர் லாரி, பஸ், கனரக வாகனம் வரும்போது, விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், பைக் ஸ்கூட்டரில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.இதேபோல் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு எதிரே மெகா சைஸில் பள்ளம் உருவாகி உள்ளது.